பிச்சிப்பூ
மணமிக்க இந்தப் பூவானது தலைவலியை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது.
1. பெண்கள் அடிக்கடி பிச்சிப்பூவை தலையில் சூடிக்கொண்டால் தலைவலியில் இருந்து நிவாரணம்
பெறலாம்.
2. பிச்சிப்பூவை நன்றாக அரைத்து அதோடு சந்தனத்தூளையும் சேர்த்து குழைத்து பருக்களின்
மீது தடவி வந்தால் பருக்கள் எளிதில் மறைந்துவிடும்.
3. பிச்சிப்பூவை தண்ணீரில் ஊர வைத்து பின்னர் அந்த தண்ணீரை வடிக்கட்டியெடுத்து கால்
பாதங்களை கழுவி வந்தால் கால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.
4. வயிறு மந்தமாக இருப்பவர்கள் இரண்டு மூன்று பிச்சிப்பூக்களை சாப்பிட்டு வந்தால்
மந்தம் நீங்கிவிடும்.
5. பிச்சிப்பூவை வெயிலில் உலர்த்தி அதோடு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி உடலின்
மீது தடவி வந்தால் உடல் பட்டுப் போன்று மென்மையாகிவிடும்.
6. பிச்சிப்பூவை அதிகாலை வேளையில் முகர்ந்து வந்தால் ஒற்றைத் தலைவலியானது குணமடைந்து
விடும்.
No comments:
Post a Comment