வாழைப்பூ
முக்கனிகளில் வாழை மூன்றாவது இடத்தைவகிக்கின்றது. வாழைப்பூ
ஏராளமான மருத்துவத் தன்மைகளைக் கொன்டதாகும்.
மருத்துவ குணங்கள்
1. வாழைப்பூ பொதுவாகவே நன்றாக
குளிர்ச்சியைத் தரும் பண்பு கொன்டதாகும்.
2. வாழைப்பூவை பருப்புடன்
சேர்த்து கடைந்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமடையும்.
3. வாழைப்பூவை அவித்து அந்த
நீரோடு சிறிது சீரகப்பொடியைக் கலந்து குடித்தால் கண் எரிச்சல் நீங்கும்.
4. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டோர்
அடிக்கடி உணவோடு சேர்த்து வந்தால் நோய் நீங்கி சுகமடைவார்கள்.
5. வாழைப்பூவை பறித்து சுத்தம்
செய்து நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண்கள்,சளி கட்டுப் போன்றவை
குணமடையும்.
6. வாழைப்பூவை உலர்த்திப்
பொடியாக்கி மோருடன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி
நீங்கிவிடும்.
7. வாழைப்பூவை நன்றாக உலர
வைத்து பொடித்து தூளாக்கி அதோடு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் அகலும்.
No comments:
Post a Comment