சுரைப்பூ

சுரைக்காய் காய்க்கும் முன்னர் பூ பூக்ககும். இந்தப் பூ மிகவும் மெல்லியதாகும்.

1.சுரைப்பூ நன்றாக குளிர்ச்சியைத் தரும் எனவே இந்த பூவை பச்சையாகவே மென்று தின்னலாம்.

2.சுரைப்பூவை அரிசி மாவுடன் கலந்து அடையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.

3.சுரைப்பூவை பாசிப்பருப்புடன் சேர்த்து நன்றாகக் கடைந்து  சுடு சோற்றில் போட்டு  கிளறி சாப்பிட்டு வந்தால் வயிற்று கடுப்பு , வயிற்று எரிச்சல் குறையும்.


4.சுரைப்பூவை வெந்தயத்துடன் சேர்த்தரைத்து தினமும் இரவு வேளையில் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமடையும்.  

No comments:

Post a Comment